NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போட்டி நல்லது – ஏமாற்று வேலை நல்லதல்ல: நேரில் சாடிய எலான் !

மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.

தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது.

திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திரெட்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அதில் இணைந்துள்ளார். அத்துடன், திரெட்ஸ் அப்பில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும்பதிவிட்டுள்ளார். பில் கேட்சின் பதிவுக்கு ரியாக்ட் செய்துள்ள மார்க் ஜூக்கர்பர்க், ஆப்-ல் இணைந்தது நல்ல முயற்சி என்று பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில் ‘திரெட்ஸ்’ செயலியின் வடிவமைப்பு அம்சங்கள் குறித்து ஒரு பயனர் அது டுவிட்டரின் பிரதி என்று பதிவிட்டிருந்தார். அதனை ஆமோதிப்பதுபோல், எலான் மஸ்க் ஒரு சிரிக்கும் முக emojiயை பதிவிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வந்த நிலையில் டுவிட்டரின் சொத்து சார் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது.

இது குறித்து பதிலளித்துள்ள எலோன் மஸ்க், ‘போட்டி நல்லது ஆனால் ஏமாற்று வேலை நல்லதல்ல‘ என ஒரு பதிவிட்டுள்ளார்.

குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தற்போது டுவிட்டரில் #threads எனும் hashtagல் trendingல் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles