NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போட்டியின் நிறைவில் ஆவேசமடைந்த ஜோகோவிச்!

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டெனிஸ் போட்டி லண்டனில் இடம்பெற்று வருகிறது.

இப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4ஆம் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் ஹால்கர் ரூன்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்தப் போட்டியின்போது ரசிகர்கள் ரூனே என்ற பெயரை இழுத்து கத்திக் கொண்டிருந்தார்கள் அதாவது, இந்த வார்த்தை வீரர்களை அவமதிப்பதற்காகப் போடும் சத்தம். அது ஜோகோவிச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போல் கேட்டது. இதனால் ஜோகோவிச் கோபமடைந்தார்.

இந்நிலையில் ,போட்டி முடிந்த பிறகு களத்தில் பேசிய ஜோகோவிச், “இங்கு வந்திருக்கும் மரியாதைக்குரிய ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மற்றொரு தரப்பின் ரசிகர்கள் களத்தில் விளையாடும் வீரரை அவமதிக்கும் வகையில் செயற்பட்டீர்கள்.

நீங்கள் ரூனேக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம். ஆனால், நீங்கள் என்னை அவமதிக்கும் வகையில்தான் செயற்பட்டீர்கள்.

நான் 20 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச டெனிஸ் போட்டியில் விளையாடுகின்றேன். எனக்கு ரசிகர்கள் என்னென்ன செய்வார்கள் என்று கண்டிப்பாகத் தெரியும். ஆனால், என்னுடைய கவனமெல்லாம் டெனிஸ் போட்டியைப் பார்ப்பதற்காக பணம் செலுத்தி வந்திருக்கக்கூடிய மரியாதைக்குரிய ரசிகர்கள் மீதுதான் இருந்தது.

இதைவிட மோசமான ரசிகர்களின் எதிர்ப்புக் குரலுக்கு மத்தியில் நான் விளையாடியிருக்கின்றேன். என்னை நம்புங்கள். உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிக்கலாம். ஆனால், அதற்கான எல்லையை நீங்கள் மீறினால் நிச்சயம் நானும் எதிர்வினை ஆற்றுவேன். இனி இதுபோன்ற அவமரியாதையாக வீரர்களை நடத்தும் ரசிகர்களை வெளியேற்ற வேண்டும் என நான் நினைக்கின்றேன்” – என்று  ரசிகர்களைக் கண்டித்திருக்கிறார்.

Share:

Related Articles