இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில் திடீர் திருப்பமாகப் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஆனால், போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் எனவும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் டொனால்ட் ட்ரம்பும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஹமாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே மோதல் தொடர்ந்து வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே போரை நிறுத்துவதற்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ட்ரம்ப், பாலஸ்தீன பிரதேசத்தில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், கடந்த வாரமாக இரு தரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி மத்தியஸ்தனம் செய்து வந்த கட்டார், இனி அமைதி பேச்சுவார்த்தையை நடத்த முடியாது எனக் கூறி விலகியுள்ளது.
இந்நிலையில், போர்நிறுத்தம் குறித்த முன்மொழிவு வைக்கப்பட்டால் அதை ஏற்க ஹமாஸ் தயாராக உள்ளதாகவும் இஸ்ரேலும் அந்த போர் நிறுத்த முன்மொழிவை மதிக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நிபந்தனை எனவும் ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினர் பாஸ்சம் நைம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாங்கள் ட்ரம்பிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.போரை நிறுத்துவதற்கு தயார்