NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போலந்துக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் உட்பட 160 அகதிகள் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

போலந்துக்கு செல்ல முற்பட்ட 160 அகதிகளை போலந்து மற்றும் பெலரஸ் எல்லையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை இவர்கள் இவர்கள் போலந்து எல்லை பாதுகாப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கையை சேர்ந்த அகதிகளே இவ்வாறு எல்லையை கடக்க முற்பட்டுள்ளனர்.

இவர்களை அழைத்து சென்றதான குற்றச்சாட்டில் நான்கு சிரிய மற்றும் மூன்று பங்களாதேஷ் மற்றும் உக்ரைனிய பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலந்து எல்லை பாதுகாப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத எல்லைக் கடப்புகளுக்கு உதவியதற்காக இந்த ஆண்டு ஏற்கனவே 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறும் போலந்து பொலிஸார், கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி வரையான காலப்பகுதியில் 16,000ஆம் முதல் 19,000ஆம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

போலந்துக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகை அதிகரித்து வருவதால் எல்லை பாதுகாப்புகளை பலப்படுத்த போலந்து அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், மேலதிகமாக 1000 எல்லை பாதுகாப்பு பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் போலந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles