போலி வேடத்தில் வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய நபர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த வைத்திய நிலையத்தை பதிவு செய்த வைத்தியர் கடந்த வருடம் வெளிநாடு சென்றதையடுத்து சந்தேக நபர் வைத்தியர் போன்று வேடமணிந்து வைத்திய நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.