NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ப்ளேஓப் சுற்றுக்கு முதல் அணியாக KKR தகுதி!

ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளேஓப் சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தகுதிபெற்றுள்ளது.

இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி ஒன்பது வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பெற்று ப்ளேஓப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

மும்பை அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 18 ஓட்டங்களால் கொல்கத்தா அணி வெற்றிவெற்றிருந்தது. 

இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கு ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்ய இன்னும் ஒரு வெற்றிமட்டுமே தேவைப்படும் நிலையில் இன்று சென்னை அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இந்தப் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சென்னை அணிக்கும் ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்ய இந்தப் போட்டி மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

ஆகையினால் இன்றையப் போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. சென்னை அணி குஜராத் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடியிருந்தது. எனினும், அந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தது.

எவ்வாறாயினும், தற்போது கொல்கத்தா அணி மட்டுமே ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று இடங்களை கைப்பற்ற ஏழு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகின்றது.

தற்போதை நிலவரப்படி மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் முறையே ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் இருக்கின்றன. சென்னை அணி நிகர ஓட்டங்களின் அடிப்படையில் மட்டுமே நான்காம் இடத்தை தக்கவைத்துள்ளது.

சென்னை அணியோடு இணைந்து லக்னோ மற்றும் டெல்லி அணிகள் தலா 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அத்துடன் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

இதில் அனைத்து அணிகளுக்கும் இரண்டுப் போட்டிகள் மீதமுள்ள நிலையில், ராஜஸ்தான் அணிக்கு மட்டும் மூன்றுப் போட்டிகள் எஞ்சியுள்ளன. 

ஆகையினால் ப்ளேஓப் வாய்ப்பை உறுதிப்படுத்த இனிவரும் போட்டிகளில் அனைத்து அணிகளும் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்தி போட்டிப்போடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Share:

Related Articles