NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளை தவறான முறையில் வீடியோ எடுத்த தாய் கைது..!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்த தாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (12) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய இரண்டு பதின்ம வயது பெண் பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் இவர்,தனது 13 வயதுடைய மகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவேளை அவரை தவறான முறையில் வீடியோ எடுத்துள்ளார்.

அதனை சிறுமியின் தங்கையான 10 வயது சிறுமி கண்டதையடுத்து தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.

Share:

Related Articles