நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நேற்று சனிக்கிழமை (02) பிற்பகல் முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் 5.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
பதுளை மாவட்டம் – வெலிமடை, ஹல்தும்முல்ல
காலி மாவட்டம் – எல்பிட்டிய
கேகாலை மாவட்டம் – வரக்காப்பொல, யட்டியந்தோட்டை
குருணாகல் மாவட்டம் – பொல்கஹவெல
மாத்தறை மாவட்டம் – கொடபொல, அக்குரெஸ்ஸ
இரத்தினபுரி மாவட்டம் – நிவித்திகல, அயகம, பலாங்கொடை
இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
களுத்துறை மாவட்டம் – புலத்சிங்கள
கண்டி மாவட்டம் – யட்டிநுவர
கேகாலை மாவட்டம் – புலத்கொஹுபிட்டிய, மாவனெல்லை, தெஹியோவிட்ட
மாத்தறை மாவட்டம் – பஸ்கொட
இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட, எலபாத்த, குருவிட்ட, கஹவத்தை, கொடகவளை, பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகள்