(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிக்க வாய்ப்பில்லை என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய மதுபானசாலைகள் திறக்கப்படும் காலத்தை அவ்வப்போது திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.