NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத்துகம – கட்டுகஹாஹேன பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகள் இடைநிறுத்தம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மத்துகம – கட்டுகஹாஹேன பிரதேச வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுகவீனமடைந்துள்ளதன் காரணமாக நோயாளிகளுக்கான சிகிச்சையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் 5 வைத்தியர்கள் இருந்தும் அவர்களில் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்னுமொருவர் பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளார்.

ஏனைய 3 மருத்துவர்களும் நோய்வாய்ப்பட்டு விடுப்பில் உள்ளனர்.

9 நாட்களாக இரவும் பகலும் தொடர்ச்சியாக 4 வைத்தியர்களின் சேவையை மேற்கொண்ட பிரதம வைத்தியரும் சுகவீனமடைந்து நேற்று (16) நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் வெளிநோயாளிகள் பிரிவில் மட்டும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையை நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

Share:

Related Articles