NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னாரில் தனியார் சொகுசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்து!

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் ஒன்று மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ்சானது நேற்று (02) மதியம் 12 மணியளவில் மன்னார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மதுங்குளி பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்றுக்கு வழி விடும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் பஸ்சில் பயணித்த பயணிகள் எவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Share:

Related Articles