மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் நீண்டகாலமாக இராணுவ சோதனை சாவடி அமைத்து காணப் பட்ட பகுதியில் கடற்கரை பூங்கா அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (21) மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் மன்னார் நகர சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
நீண்ட நாட்களாக பிரதான பாலத்துக்கு அருகில் இராணுவ சோதனை சாவடி மற்றும் இராணுவ முகாம் வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டு குறித்த காணி மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மன்னார் மக்கள் ஓய்வு நேரங்களை கழிக்கும் விதமாக கடற்கரை பூங்கா அமைப்பதற்கான நிதி முதற்கட்டமாக நகரசபையால் ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் மாவட்ட இராணுவ கட்டளையிடும் தளபதியின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
முதலில் கடற்கரை பூங்காவிற்கான திரைச்சீலை நீக்கப் பட்டதுடன் நிர்மாண பணி தொடர்பான விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மரக்கன்று நடுகையும் இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள்,நகரசபை செயலாளர்கள்,நகரசபை ஊழியர்கள்,பொலிஸ்,ராணுவ அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்