NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னார் மனித புதைகுழி ‘ஸ்கேன்’ செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதொச வளாகப் பகுதியில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இவ்வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இதன் முதற்கட்டமாக தடயப் பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழவுள்ள பகுதியை ஸ்கேன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக மன்னார் சதொச வளாகத்துக்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடம் அமைந்துள்ள பகுதியிலும், அகழ்வுப் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகின்றன.

எனினும், அகழ்வுப் பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கேன் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்கவோ, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே சதொச வளாக மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் பற்றி செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தினூடாக அகழ்வுப் பணி தொடர்பான உண்மையான விடயங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப்படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளையோ காணொளியோ புகைப்படமே எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles