NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மரக்கறிகளின் இன்றைய விலை விபரம்!

நுவரெலியா விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளில் மேல் நாட்டு உணவுகளுக்காக பயன்படுத்தப்படும் இலை வகைகள், மிளகாய் வகைகள், கிழங்கு வகைகளின் விலைகள் வீழ்ச்சியடையாமல் உயர்வான மொத்த விலையில் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையிலிருந்து வெளி மாவட்ட சந்தைகளுக்கும், நுவரெலியாவுக்கு வருகை தரும் உல்லாச பயணிகளுக்கும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய மொத்த விற்பனை நிலையங்களில் (29) விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியலை மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் கரட் 1350/=, சீமை தக்காளி 800/=, சுக்கினி 550/=, சிவப்பு ராபு 1100/=,புரகோலின் 4100/=, ரோஸ்மேரி 550/=, பாசலி 1500/=, மிஞ்சி இலை 800/=, சிவப்பு சலாது 1800/=, ஐஸ்பேக் 2600/=, சல்திரி 1200/=, பெஸில் இலை 3100/=, குடைமிளகாய் சிவப்பு 1900/=, குடைமிளகாய் மஞ்சல் 1900/=, குடைமிளகாய் பச்சை 1300/=, சிவப்பு கோவா 3700/= என விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லீக்ஸ் 460/=, கோவா 520/=, ராபு 170/=, இலையுடன் பீட் 470/=, இலை அகற்றிய பீட் 570/=, உருளைகிழங்கு 320/=, சிவப்பு உருளைகிழங்கு 340/=, நோக்கோல் 370/= என மொத்த விற்பனை விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles