NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தடை..!

யாழ்ப்பாணம் – மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மருதங்கேணி பாலத்தின் இரு புறங்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால்
பாலத்தின் ஊடாக கனரக வாகன போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பாலம் மேலும் சேதமடையாத வகையில்  பாலத்தின் இருபுறங்களும் தற்போது மண் மூடைகள் அணைக்கப்பட்டுள்ளது.

விரைவில் பாலம் புனரமைக்கப்பட்ட பின்னர் கனரக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட செயலர் அறிவித்துள்ளார். 

Share:

Related Articles