(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பற்சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இன்மையினால், தேசிய பல் வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் வைத்தியசாலைகளின் பற்சிகிச்சை மையங்கள் செயலிழந்து வருவதாக பல் வைத்திய நிபுணர்கள் சங்கம் சுகாதார அமைச்சுக்கு அறியப்படுத்தியுள்ளது.
பல் மருத்துவ சேவையை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்கு, 2,000 வகையான மருந்துகள் அவசியமாகும்.
அவற்றில் 230 வகையான மருந்துபொருட்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக வழங்கப்படவில்லை எனின், பல் மருத்துவ சேவையின் வீழ்ச்சியை தடுக்க முடியாது என பல் வைத்திய நிபுணர்கள் சங்கம் சுகாதாரத்துறைக்கு சுட்டிக்காட்டியுள்ளது.