NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மருந்துகள் – தடுப்பூசிகளை கையாளும் போது ஏற்படும் ஒவ்வாமை தொடர்பில் விழிப்புணர்வு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்காக சுகாதார ஊழியர்களின் விழிப்புணர்வு திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ஒவ்வாமை கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சை ஆகிய துறைகளில் இந்த விழிப்புணர்வு நடைமுறைப்படுத்தப்படும் என துணை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

கொடுக்கப்படும் மருந்துகளின் தடுப்பு, கண்டறிதல், மருந்தளவு செறிவு, கொடுக்கப்படும் அதிர்வெண் மற்றும் மருந்துகளை வழங்கும் முறை குறித்து ஊழியர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வாறான ஒவ்வாமைக்கான சிகிச்சையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்த அவர், சுகாதார ஊழியர்களின் அறிவை மேலும் மேலும் கூர்மைப்படுத்தி, புதிய நடவடிக்கையொன்றை மேற்கொள்வதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles