NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலேஷிய விமானம் விழுந்து நொருங்கியதில் 10 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மலேஷியாவின் – லங்காவி பகுதியிலிருந்து 6 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்களுடன் செலங்கோரிலுள்ள சுபங்க் விமான நிலையம் நோக்கி ஜெட் வேலட் எனும் தனியார் ஜெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்விமானத்திற்கு மதியம் 02:48 மணியளவில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. மதியம் சுமார் 02:10 மணியளவில் தரையிறங்கும் சற்று நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்தின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஷா ஆலம் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.

இவ்விபத்தில், விமானம் நெடுஞ்சாலையில் அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் பைக் மீது விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். இதோடு விமானத்தில் பயணம் செய்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சமூக வலைதளங்களில் இவ்விபத்து குறித்து வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்களிலில் ஷா ஆலம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தீயுடன் புகை வந்து கொண்டிருப்பதும், விமானத்தின் பாகங்களும் தெரிகிறது.

வீதியில் விழுந்த விமானம் உடனடியாக வெடித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விமானத்தில் உயிரிழந்த பயணிகளில் ஜொஹாரி ஹாருண் எனும் அந்நாட்டின் அரசியல்வாதியும் ஒருவர். விபத்து குறித்து வருத்தம் தெரிவித்திருக்கும் பல முக்கிய பிரமுகர்களும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles