NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மழைக்காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை – மே.தீவுகள் இளையோர் போட்டி !

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான முதல் நான்கு நாள் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதி மழையால் பாதிக்கப்பட்டது.

இலங்கை இளையோர் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 432/8 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி இரண்டாவது நாள் நிறைவில் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

இன்றைய நாள் போட்டி ஆரம்பித்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியாக 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்படி 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இன்றைய நாள் ஆரம்பம் தடுமாற்றமாக இருந்தபோதும், ஜோர்டன் ஜோன்சன் மற்றும் ஸ்டீவ் வெடர்போர்ன் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.

இதில் ஜோர்டன் ஜோன்சன் 54 ஓட்டங்களையும், ஸ்டீவ் வெடர்போர்ன் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த நிலையில், போட்டியில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து ஆட்டத்தில் மழை குறுக்கிட, ஆட்டநேரம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டம் நிறுத்தப்படும்போது 119 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்ததுடன், இலங்கை அணியைவிட 313 ஓட்டங்கள் பின்னடைவை சந்தித்திருந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் விஷ்வ லஹிரு 2 விக்கெட்டுகளையும், விஹாஷ் தெவ்மிக ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Share:

Related Articles