(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது.
ஆட்டம் நிறுத்தப்பட்ட பிறகு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஓய்வை இரசித்துக்கொண்டிருந்தார்.
ட்விட்டரில் பகிரப்பட்ட காணொளிகளில் ஹசன் அலி மைதானத்தில் விரிக்கப்பட்ட மழைநீர் உட்புகாத இறப்பர் உறையின் மீது வேடிக்கையாக விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தார்.
இந்த காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகியுள்ளது.