மஸ்கெலியா – லக்கம் பெருந்தோட்டப் பகுதியில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த பொறியில் சிறுத்தையொன்று சிக்கியுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை அண்மித்த பகுதியொன்றிலேயே குறித்த சிறுத்தை சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள், கால்நடை வைத்தியரின் உதவியுடன் சிறுத்தையை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.