NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாங்குளம் கோர விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

முல்லைத்தீவு மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(29) உயிரிழந்தார்.

கடந்த 25ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்து மீது வீதியில் பயணித்த பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து ஏற்பட்ட நாளில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles