NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாங்குளம் பகுதியில் கோரவிபத்து – மூவர் பலி…!

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக A9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் வருகை தந்த லொறி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியதில் வீதியில் நின்ற நபர்கள் மூவர் லொறியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உடல்சிதறி பலியாகியுள்ளனர்லொறியின் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த இன்னொருவர் என இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Share:

Related Articles