இந்தியா, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் ஏராளமான மக்கள் வந்து உணவருந்தும் பிரபலமான ஹோட்டல் ஒன்று இயங்கி வருகின்றது.
இந்நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் வசிக்கும் பொலிஸ் அதிகாரியொருவர், மாட்டிறைச்சி ஃப்ரை ஒரு பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். பார்சலை பிரித்தவுடன் அவருக்கு பேரதிர்ச்சி.
குறித்த பார்சலில் வால் முறிந்த நிலையில் இறந்த பல்லியொன்று கிடந்துள்ளது.
உடனே மாட்டிறைச்சி ஃப்ரை பார்சலை எடுத்துக்கொண்டு மார்த்தாண்டம் பொலிஸ் நிலையத்தில் இதுகுறித்து ரோகித் புகாரளித்துள்ளார்.
பொலிஸார் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க, குறித்த ஹோட்டலுக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த மக்களை வெளியேற்றிவிட்டு இறைச்சியை சோதனை செய்துள்ளனர்.
இதில் சந்தேகம் இருந்த காரணத்தினால் இறைச்சியை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் மார்த்தாண்டம் பொலிஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
உணவகங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருவது மக்களை ஒருவித பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்களின் பாதுகாப்புக்காக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் தீவிர பரிசோதனை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.