இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் போட்டி நேற்று இடம்பெற்றது.
நேற்றைய போட்டியின் போது துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தினேஷ் சந்திமாலுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
மார்க் வுட் வீசிய பந்து தினேஷ் சந்திமாலின் வலது கையின் கட்டை விரலில் அடிபட்டு மைதானத்தை விட்டு வெளியேறிய தினேஷ் சந்திமால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்துக்கு முகம் கொடுக்கும் போது தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 236 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸிற்காக 358 ஓட்டங்களைப் பெற்றது.