NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மார்பக புற்றுநோயால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ, மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என தெரிவித்தார்.

இலங்கையில் வருடாந்தம் 5,000க்கும் அதிகமான மார்பக புற்றுநோய்கள் பதிவாகுவதாக சமூக சுகாதார வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

“உலக நாடுகளில் மார்பகப் புற்றுநோய் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. ஆனால் இலங்கையுடன் ஒப்பிடும்போது உலகில் முன்கூட்டியே குறித்த நேயை கண்டறிதல் அதிகமாக உள்ளது.

எனவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மார்பக புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளின் சதவீதம் இலங்கையில் அதிகரித்துள்ளது. இலங்கையில் சுமார் 5,500 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles