மனித உடலில் ஏற்படும் மரபணு மாற்றங்களில் சுமார் 9ஆயிரம் மரபணு மாற்றங்களில் சில பிறழ்வுகள் புரத செயல்பாட்டை சீர்குலைத்து புற்றுநோயை ஏற்படுத்தும்.
புற்றுநோயை தாமதமாக கண்டறிவதனாலேயே பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.
இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்கு மார்பக புற்றுநோய் பிரச்சினையை சில வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து அதனை தெரிவிக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) தொழில்நுட்பம் வந்தால் நன்றாக இருப்பதோடு, பல உயிரிழப்புக்களையும் தடுக்கலாம்.
இவ்வாறானதொரு தொழில்நுட்பத்தைத் தான் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Computer Science And Artificial Intelligence Laboratory – CSAIL) மற்றும் ஜமீல் க்ளினிக் ஃபார் மெஷின் லெர்னிங் ஐ சேர்ந்த ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளனர்.
மிராய் (MIRAI) என அழைக்கப்படும் இந்த சிஸ்டம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பாதிப்பை எக்ஸ்-ரே அல்லது மாமோகிராம் பரிசோதனை மூலமாகவே கணித்து அறியத் தரும்.
இந்த தொழில்நுட்பம் நோயாளர்களின் உடல்நிலையின் எதிர்கால மாற்றத்தை கணிக்கும் திறன் கொண்டுள்ளது.
மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையில் இரண்டு இலட்சம் நோயாளர்களிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.