(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இன்று (08) சர்வதேச சமுத்திர தினமாகும்.
‘மாற்றமடையும் புவியின் சமுத்திரங்கள்” என்பதே இந்த வருட சர்வதேச சமுத்திர தினத்தின் கருப்பொருளாகும்.
மனிதனின் அன்றாட செயற்பாடுகளால் சமுத்திரங்கள் பாரியளவில் மாசுக்குள்ளாகி அழிந்து வருகின்றன.
பூமிக்கு தேவைப்படும் 50 சதவீத ஒட்சிசனை சமுத்திரங்களே உற்பத்தி செய்கின்றன. அத்துடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான புரத உணவுக்கும் மருந்து உற்பத்திகளுக்கும் சமுத்திரமே முக்கிய காரணியாக விளங்குகிறது.
ஆனால் பெருகி வரும் பிளாஸ்டிக் பாவனையால் சமுத்திரத்தில் வாழும் உயிரினங்கள் பல அழிவடைந்து வருகின்றன. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 8.8 மில்லியன் டொன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் சமுத்திரங்களில் விடுவிக்கப்படுகின்றன.
எம்மை காக்கும் சமுத்திரத்தை நாமும் காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்.