மாலைதீவின் 20ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நேற்று (21) அங்குள்ள 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
ஜனாதிபதி முகமது முய்சுவின் செயல்பாடுகளால் அண்டை நாடான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிரூபிப்பதற்கான முக்கிய சோதனையாக பார்க்கப்பட்டது.
தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இதில், ஜனாதிபதி முகம்மது முய்சுவின் கட்சி அதிகப்படியான இடங்களில் வென்றது.
சுமார் 66 இடங்களை முய்சு கட்சி வென்றுள்ளது. இது பாராளுமன்றத்தில் 3இல் 2 பங்காகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.