NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாவீரரான மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தந்தை உயிரிழப்பு…!

மாவீரர் நாளில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை அவரது வீட்டில் வைத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது.

குறித்த மனதை உருக்கும் சம்பவம் நேற்றையதினம் முள்ளியவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவில் நேற்றையதினம் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை ஒருவர் அவரது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இசைக்கலைஞன் என்ற மாவீரரின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் திருகோணமலை திரியாயை பிறப்பிடமாகவும் முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

மேலும், அவரின் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles