NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“மிகவும் வருத்தமாகத் தான் இருக்கிறது. இதில் இருந்து மீண்டுவர சில காலம் ஆகும்” – ஏய்டன் மார்க்ரம்

ஐ.சி.சி. நடத்திய உலகக் கிண்ணத் தொடர்களில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி தென் ஆப்பிரிக்கா அணி அசத்தியது. இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா வெற்றி வாய்ப்பை இந்தியாவிடம் பறிக் கொடுத்தது.

உலகக் கிண்ணத் தோல்வியை தொடர்ந்து போட்டிக்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் ஏய்டன் மார்க்ரம் கூறும் போது, “மிகவும் வருத்தமாகத் தான் இருக்கிறது. இதில் இருந்து மீண்டுவர சில காலம் ஆகும். வலிக்கிறது. ஆனால் பந்துவீச்சாளர்கள் மற்றும் மொத்த அணியினருக்கும் முழு பாராட்டை கொடுக்க வேண்டும்.”

“நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். அவர்களை எங்களால் அடிக்க முடிந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தினோம். நாங்கள் சிறப்பாக பேட் செய்தோம். எனினும், கிரிக்கெட் எனும் தலைசிறந்த போட்டியின் சூழல் இன்று எங்களுக்கானதாக அமையவில்லை.”

“நாங்கள் ஏராளமான போட்டிகளை கடந்து வந்திருக்கிறோம். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை அது முடியாமல் தான் இருந்தது. போட்டியின் போது நாங்கள் சவுகரியமான நிலைக்கு வரவேயில்லை. எங்கள் மீது ஸ்கோர் போர்டு அழுத்தம் இருந்தது. அந்த வகையில், இந்த இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி நாங்கள் என்பதை உணர முடியும்.”

“இந்த முடிவு நல்ல முறையில் அமையும் என்று நம்புகிறேன். கடுமையான போட்டி அளித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம், எங்களது திறமையை நல்ல முறையில் வெளிக்கொண்டு வருவோம் என்று நம்புகிறேன், என்று தெரிவித்தார்.

Share:

Related Articles