NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் ஒக்டோபர் மாதம் மின் கட்டணம் குறைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு..!

இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெற வேண்டிய மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஐக்கிய கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அதன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித இதனைத் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட வேண்டிய மின்சாரக் கட்டணம் குறித்த தரவுகளை மின்சார சபை இன்னும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பவில்லை எனவும் தற்போது மின்சார சபையின் நிகர லாபம் 155 பில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே ஜனாதிபதி ஏன் இன்னும் சுரண்டுவதற்கு அனுமதிக்கிறீர்கள்? நீங்கள் மக்கள் தொடர்பில் சிந்திப்பவராக இருந்தால் மின்சார சபையிடம் கேளுங்கள் இன்னும் உறங்குகிறீர்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகவே, இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் கட்டணத்தை 45 சதவீதமாவது குறைக்க வேண்டும் எனவும் ஐக்கிய கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles