NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முச்சக்கரவண்டி விபத்தில் 11 சிறுவர்கள் காயம் – யாழில் சம்பவம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யாழ்ப்பாணத்தில் அதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை, உதயபுரம் பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டிக்குள் இருந்த 11 மாணவர்களும் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த 12 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles