NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்! 

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

கட்சியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது வன்னிமாவட்டத்தில் இம்முறை சு.தவபாலன் அவர்களை முதன்மை வேட்பாளராகவும்,எ.செல்வநாயகம்,றொசின் பெர்ணான்டோ,தி.கிந்துயன், தே.தினேஸ்குமார்,பா.ஆனந்தபிரசாத்,ச.ரகுமதி,சோ.பிரசாத்,அ.ரொணிடிமல் ஆகியோரை கொண்ட வேட்பாளர் குழுவை களம் இறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles