NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் இராணுவ வீரர் அடித்துக்கொலை – பிக்கு கைது!

கண்டி – கட்டம்பே, தியகடனாதோட்டை விகாரையில் ஒருவர் தாக்கப்பட்டு மரத்தில் கட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விகாரையின் தலைவரான தேரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மெனிகின்ன பிரதேசத்தைச் சேர்ந்த (வயது 43) முன்னாள் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நேற்று முன்தினம் (07) சந்தேகத்திற்கிடமான முறையில் ஆலய வளாகத்தினுள் பிரவேசித்த போது ஆலயத்தில் இருந்த சிலர் அவரை தாக்கி கை, கால்களை கட்டி மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த நபரை கொடூரமாக தாக்கி மரத்தில் கட்டி வைத்து பொலிஸாருக்கு அறிவிக்கவில்லையா? மற்றும் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles