முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் (மனிதவளம்), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவுக்கு (10) இதனை கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் இருந்து 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்று காலை தமது கடமைகளை முடித்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன் குழு புகைப்படத்திற்கும் தோன்றினார்.