சாலையின் இருபுறமும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் , சுற்றாடல் அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொடர்புபட்ட உள்ளுராட்சி அதிகாரிகளுடன் இணைந்து வீதியோரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்களை உடனடியாக ஆய்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மழையுடனான காலநிலை மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய அனைத்தையும் அகற்றுமாறும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை கொள்ளுப்பிட்டியில் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர்,
“சேதங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
வீதியின் இருபுறங்களிலும் முறிந்து விழும் ஆபத்துள்ள மரங்களை அகற்றுமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.