இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் கொஹூவல சந்தி மற்றும் கெட்டம்பே சந்தி மேம்பாலங்களின் எதிர்கால நிர்மாணப் பணிகள் குறித்து ஹங்கேரி அரசாங்க அதிகாரிகளுக்கும் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது, ஹங்கேரிய அரசாங்கத்திடமிருந்து 52 மில்லியன் யூரோக்கள் கடன் உதவியை பெற்றுக்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் வெற்றியை கருத்திற்கொண்டு, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கொ{ஹவல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்களின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வது தொடர்பில் இரு தரப்பினரும் மேலும் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.