மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் புகையிரதத்துடன் சரக்கு புகையிரதம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வழங்கப்பட்ட சமிக்ஞையில் நிற்காமல் பயணித்த சரக்கு புகையிரதம் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் புகையிரதத்துடன் மோதியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் புகையிரதபெட்டிகள் தடம்புரண்டன. மேலும், இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விபத்தினால் அதிர்ச்சியடைந்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வைத்தியர்கள், மீட்பு பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.