NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மோட்டார் சைக்கிள் – அம்பியூலன்ஸ் மோதி விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

காலி – கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிளும் அம்பியூலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவன் இன்று (19) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலி – கொழும்பு வீதியில் தருன சேவா மாவத்தை அருகே, காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பலபிட்டிய வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனம் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவரை கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles