பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக நாரஹேன்பிட்டையில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் குறித்த திணைக்களம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த தினங்களில் நாரஹேன்பிட்டையில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.