NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் கடலில் நீராடச் சென்ற இருவர் பலி…!

யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்பகுதியில் நீராடச் சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 21 மற்றும் 37 வயதுகளையுடைய வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles