NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது..!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் .

யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , கொட்டடி பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது அவரது உடைமையில் இருந்து 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

Share:

Related Articles