NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ். நீர்வேலியில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை!

யாழ்ப்பாணம் – நீர்வேலியிலுள்ள ஆசிரியரொருவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கொள்ளை சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் புகுந்த இனம் தெரியாத சிலர், உறங்கிக் கொண்டிருந்த ஆசிரியரொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துள்ளதுடன், ஒரு தொகை பணத்தையும் அபகரித்துள்ளளனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Related Articles