யாழ் – நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களை கைது செய்ய முற்பட்ட வேளை மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளததுடன்இ மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போது இ கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இன்று அதிகாலை அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டமீனவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர்.
அவ்வேளை கடற்தொழிலாளர்களின் படகு கடலில் கவிழ்ந்துள்ளது. அதில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் இ மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். ஏனைய மூவரும் கடற்படையினரால் மீட்கப்பட்டுஇ காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளைஇ காணாமல் போன மீனவரை தேடும் நடவடிக்கையிலும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்ட வேளை இலங்கை கடற்படை மாலுமி ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.