NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு!

யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் பற்றாக்குறை நிலவுவதாக வைத்தியசாலை இரத்த வங்கியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரத்த வகைகளில் ஏற்பட்டுள்ள இந்த பற்றாக்குறை வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைகளை நடத்துவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். 

யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அதிகாரிகள் மேலும் கூறுகையில், 

வைத்தியசாலையில் இரத்த சோகை, புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் இரத்த வகையினை மாற்றும் தேவையுடைய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

போதியளவில் இரத்த வகைகள் இல்லாத நிலையானது வெவ்வேறு இரத்த வகைகளின் தேவைகளை அதிகமாக நாடும் இந்த நோயாளிகளின் ஆரோக்கியமான உடல்நலனில் தாக்கம் செலுத்துகிறது. 

அத்தோடு, இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளதும், மேலதிக சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைகளில் இருந்து இந்த மருத்துவமனைக்கு மாற்றப்படும் நோயாளிகளதும் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட நிலையில், அவர்களுக்கு அவசரமாக இரத்த வகைகள் தேவைப்படுவதாகவும், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற கணிசமான அளவு இரத்த வகைகளை பெறுவதற்கு தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் மேலும் வலியுறுத்தியுள்ளனர். 

மேலும், மருத்துவமனையின் வார்டுகளுக்கும் போதியளவில் இரத்தம் விநியோகிக்கப்பட வேண்டும் என்கிற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ள போதிலும், தேவைக்கேற்ப, இரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என மருத்துவமனை வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது. 

எனவே, இரத்த தானம் செய்பவர்கள், சமூக சேவையாளர்கள், நலன்விரும்பிகள், சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்புகள் முன்வந்து இரத்த தானம் செய்து, இரத்தம் பெறும் அவசர தேவையுடைய நோயாளிகளின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கோரியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles