NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை – 5,000 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக 1,492 குடும்பங்களை சேர்ந்த 5,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் T.N.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 175 குடும்பங்களை சேர்ந்த 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 16 குடும்பங்களை சேர்ந்த 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 21 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 573 குடும்பங்களை சேர்ந்த 2,335 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 68 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 167 குடும்பங்களை சேர்ந்த 569 பேர் பல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 14 குடும்பங்களை சேர்ந்த 53 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 465 குடும்பங்களை சேர்ந்த 1,517 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் T.N.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles