யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
42 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.