தனது பெயரை பயன்படுத்தி பாரிய அளவில் நிதி மோசடியை இடம்பெற்று வருவதாக பிரபல நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் போலி மபேஸ் கணக்கினை ஆரம்பித்து நிதி மோசடி செய்து வருகின்றனர்.
எனினும், அந்த பேஸ்புக் பக்கம் என்னுடையது அல்ல. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் பணம் கொடுத்த வீடியோக்களைப் பயன்படுத்தி இந்த மோசடி செய்யப்பட்டு வருகின்றது.
எனது பெயரைப் பயன்படுத்தி வங்கி கடனட்டைகளின் இரகசிய இலக்கங்களை கேட்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். இது போலியான ஒரு பக்கம்.
எனவே என்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாராவது வங்கிக் கடனட்டை இரகசிய இலக்கத்தினைக் கேட்டால் கொடுக்க வேண்டாம். இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுபவர்களிடம் ஏமாற வேண்டாம்.
அத்தோடு, நான் தருவதாக தெரிவித்து பெறுமதியான பரிசில்களைப் பெற்றுக்கொள்ள பதிவு செய்யுங்கள் எனவும் விளம்பரப்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. எனினும் இது மோசடியான ஒரு செயல். இதனை நம்ப வேண்டாம். இலட்சக்கணக்கான பணத்தினை இழக்கும் வாய்ப்பு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.