இலங்கையிலுள்ள வளங்களை விற்று ஏப்பமிடும் முயற்சிகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையங்களை விற்பனை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே ஒமல்பே சோபித்த தேரர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நாட்டின் வளங்களை விற்பதன் மூலம் தமது விரும்பங்களை நிறைவேற்றவே சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மீண்டும் தமக்கு அரசியல் அதிகாரத்தை ருசிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பது அதிபர் தலைமையிலான தற்போதுள்ள அரசாங்கத்திற்கு தெளிவாக தெரியும் என ஒமல்பே சோபித்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அனைத்து வளங்களையும் விற்று, அதன் மூலம் இலாபம் மற்றும் பயன்களை பெறுவது மாத்திரமே அவர்களின் ஒரே நோக்கம் எனவும் அவர் சாடியுள்ளார்.